இது பச்சை துரோகம்...! இது 'CONTINUE' ஆச்சுன்னா நாங்க சும்மா விடமாட்டோம்...! 'நாங்க ஏற்கனவே ஸ்டார்ட் பண்ணியாச்சு...' - கடும் 'எச்சரிக்கை' விடுத்த கிம் ஜாங் உன்னின் சகோதரி...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரிய தீப கற்பத்தில் அமெரிக்கா, தென் கொரியா ராணுவத்தினர் இடையேயான ராணுவ கூட்டுப்பயிற்சிக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தென் கொரியாவும் அமெரிக்காவும் ராணுவ கூட்டுப் பயிற்சிகளைத் நடத்தினால், அவை வட கொரியாவிடமிருந்து பெரிய அளவில் பாதுகாப்பு மிரட்டல்களை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை வரும் என வட கொரிய உயர் அதிகாரி கிம் யோ ஜாங் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். வரும் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை கொரிய தீபகற்பத்தில், அமெரிக்க மற்றும் தென் கொரிய படைகள் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவ கூட்டுப்பயிற்சியின் முன்னோட்டமாக நான்கு நாள் ஆரம்ப பயிற்சியை நேற்றைய தினம் (10-08-2021) இரு நாட்டு வீரர்களும் தொடங்கியுள்ளனர். இதற்கு வடகொரிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டு இருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்காவும் தென் கொரியாவும் கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலையை அதிகரித்து வருகின்றனர். நாங்கள் கொடுத்த எச்சரிக்கையை மீறி ராணுவ பயிற்சி நடத்துவது தென் கொரியா எங்களுக்கு செய்யும் துரோகம்.
வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும், முன்கூட்டியே தாக்குதல்களை மேற்கொள்வதற்கான திறன்களை அதிகப்படுத்தவும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கிம் யோ ஜாங் கூறியுள்ளார்.