'ரயில்' அப்படியே மெதுவா 'மூவ்' ஆயிட்டே இருக்கும்...! 'திடீர்னு உள்ள இருந்து...' இனி எவனும் நம்ம பக்கம் 'தலை' வச்சு கூட 'படுக்க' கூடாது...! - அடுத்தடுத்து 'பக்கா' சம்பவம் செய்த நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக அமைப்புகளின் தடைகளை மீறி வடகொரியா (North Korea) அவ்வப்போது ஏவுகணை (missile) சோதனையை நடத்தி வருகிறது.
அதேபோல், கடந்த புதன்கிழமை (15-09-2021) அன்று திட்டமிட்ட இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான க்ரூஸ் ஏவுகணையை சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது. இந்த ஏவுகணை சோதனை கொரிய தீபகற்ப நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், தற்போது பரிசோதனை செய்த இந்த ஏவுகணையானது ரயிலிலிருந்து புறப்பட்டு திட்டமிட்ட இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணை என வடகொரியா கூறியுள்ளது.
இந்த சோதனையின் போது, கிழக்கு கடற்கரைப் பகுதியில் சுமார் 800 கி.மீ. தொலைவில் இருந்த இலக்கை தாக்கி அழித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதன்கிழமை நடந்த சோதனையில் க்ரூஸ் ஏவுகணைகள் இரண்டு மணி நேரத்தில் சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்துப் போய் தாக்கியுள்ளன.
இந்தத் தொலைவை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை சில நிமிடங்களில் அடைந்து விடும். ஆனால் தங்களது ஏவுகணைகளை எதிரிகள் கண்டறிந்து விடக் கூடாது, இடைமறித்துத் தடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே க்ரூஸ் ரக ஏவுகணைகளுக்கு வடகொரியா முக்கியத்துவம் அளித்திருக்கலாம்.
தற்போது ஏவுகணை தீப்பிழம்புகளை வெளிவிட்டவாறு செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
வடகொரிய யாங்டோக்கின் மத்திய பகுதியில் இருந்து தான் ஏவுகணை ஏவப்பட்டிருப்பதாக தென் கொரியா நாடு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பாக வடகொரியாவிடம் இருந்த எந்த க்ரூஸ் ரக ஏவுகணையும் அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டவை அல்ல என்று கூறப்படுகிறது.
இந்த வருட தொடக்கத்திலேயே க்ரூஸ் ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு வருவதாக அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்திருந்தார். எதிர்காலத்தில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் பணியை இவை செய்யும் என்றும் தெரிவித்திருந்தார்.