'நீண்டநாள் அமைதிக்குப் பிறகு'... 'அச்சத்தை கிளப்பியுள்ள நாடு!'... 'திடீரென கடுமையாகும் நடவடிக்கைகளால் வலுக்கும் சந்தேகம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியாவின் தென் பகுதியைச் சேர்ந்த நகரம் ஒன்றில் கொரோனா அச்சம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களை அந்நாட்டு அரசு தனிமைப்படுத்தியுள்ளது.
![North Koreas Escalating Corona Response Raises Fear Of Outbreak North Koreas Escalating Corona Response Raises Fear Of Outbreak](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/north-koreas-escalating-corona-response-raises-fear-of-outbreak.jpg)
உலகம் முழுவதும் கொரோனாவால் பல நாடுகளும் பெரும் பாதிப்பை சந்தித்துவரும் நிலையில், வடகொரியா மட்டும் கொரோனா பாதிப்பு குறித்த எந்தவித செய்தியையும் வெளியிடாமல் இருந்து வந்தது. முன்னதாக வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கில் கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைத்தும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது கொரோனா பரவலை தடுக்க அதிபர் கிம் நடவடிக்கைகளை கடுமையாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வடகொரியாவின் தென் பகுதியில் கொரோனா அச்சம் நீடிப்பதால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், துறைமுகத்துக்கு வந்த உணவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த வடகொரியா தற்போது கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைளில் தீவிரமாக இறங்கியுள்ளது அங்கு தீவிர நோய் பரவல் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும், அச்சத்தையும் மற்ற நாடுகளிடையே கிளப்பியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)