'மேட்ச் எவ்வளவு சீரியஸா போகுது'... 'இந்த நேரத்துல இஷான் இப்படி பண்ணலாமா'?... 'கடுப்பான சென்னை ரசிகர்கள்'... பதிலடி கொடுத்த மும்பை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி 3 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பித்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு போட்டிகள் ஆரம்பித்துள்ளதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். அதிலும் நேற்று சென்னை அணி மும்பை அணியுடன் மோதியதால் ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பு நிலவியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 58 பந்தில் 88 ரன்கள் விளாசினார். இதன் பின்னர் வெற்றிக்கு 157 ரன்கள் தேவை என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கிய நிலையில், தொடக்க வீரர்கள் குயின்டான் டி காக் 17 ரன்னிலும், அன்மோல்ப்ரீத் சிங் 16 ரன்னிலும் வெளியேறினார்கள்.
அதன்பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் 3 ரன்னிலும், இஷான் கிஷன் (Ishan Kishan) 11 ரன்னிலும் வெளியேறி மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்கள். ஆனால் சவுரப் திவாரி மட்டும் இறுதி வரை மும்பை அணியின் வெற்றிக்காகப் போராடிய நிலையில், அது கைகூடாமல் போனது. கடைசி ஓவரை பிராவோ வீச, அவர் 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். இதனால் மும்பை அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதற்கிடையே தோனியின் ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். ஆனால் அவர் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆடம் மைல்ன் பந்து வீச்சில் டிரண்ட் போல்ட்டிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். இது ஒருபுறம் இருக்க தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்த நேரத்தில் அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷான், அவுட் என்பது போலச் செய்கை செய்தார்.
இதனிடையே இஷான் கிஷான் செய்த செய்கையை மும்பை ரசிகர்கள் வைரலாக்க, ஏற்கனவே தோனி அவுட் ஆன கடுப்பிலிருந்த சென்னை ரசிகர்கள், இன்னும் கோபமானார்கள். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஆட்டத்தில் இது போன்ற கிண்டலான சில விஷயங்கள் நடக்கும், இதை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளலாமா என மும்பை ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
Ishan Kishan having fun moments with #MSDhoni
Two Jharkhand keepers in one frame !!
One future star alongside legend!!#CSKvsMI #Dhoni #Kishan pic.twitter.com/FS5CYxdPxL
— Pushkar Pushp (@ppushp7) September 19, 2021