என்னது ஹார்ட்டின் எமோஜி அனுப்புனா 5 வருசம் ஜெயில் தண்டனையா?.. காதலர் தினத்தில் வந்த ‘ஷாக்’ நியூஸ்.. எங்க தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Feb 15, 2022 08:59 AM

வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற ஹார்ட்டின் எமோஜீயை அனுப்பியதாக புகார் எழுந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி நாட்டின் சைபர் கிரைம் அந்நாட்டு பொதுமக்களை எச்சரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sharing red heart emoji may lead to jail in Saudi Arabia: Report

வாட்ஸ் அப்

உலகம் முழுவதும் பல கோடி மக்கள் தகவல் பரிமாற்றத்துக்காக வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அப்போது பலரு தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக சிவப்பு நிற ஹார்ட்டின் எமோஜீயை அனுப்புகின்றனர். இந்த சூழலில் சவுதி அரேபியாவில் ஹார்ட்டின் எமோஜியை அனுப்பினால் சிறை தண்டனை விதிக்கபடும் என அந்நாட்டு சைபர் கிரைம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா சட்டத்தின்படி, இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா

இதுகுறித்து சவுதி அரேபியாவின் மோசடி புகார்களுக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர் அல் மோடாஸ் குட்பி நாளிதழ் ஒன்றில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற ஹார்ட்டின் எமோஜீயை ஒருவரது விருப்பம் இல்லாமல் அனுப்புவது துன்புறுத்தல் குற்றத்திற்கு சமம். ஆன்லைனில் சேட்டிங் செய்யும் போது சில படங்கள் மற்றும் எமோஜீக்களை பயன்படுத்துவதால், எதிர்தரப்பினர் காயமடைந்ததாக புகார் தொடர்ந்தால், அது துன்புறத்தல் குற்றமாக கருதப்படும். எந்த ஒரு நபருடனும் அவர்களின் அனுமதியின்றி உரையாடலில் ஈடுபடுவதையோ அல்லது சங்கடமாக உணர வைக்கும் வகையில் உரையாடல்களில் ஈடுபடுவதையோ, சிவப்பு நிற ஹார்ட்டின் எமோஜீக்களை பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sharing red heart emoji may lead to jail in Saudi Arabia: Report

ஹார்ட்டின் எமோஜி

மேலும் ஒரு நபரின் தன்மானத்தை தொடும் அல்லது பாலியல் அர்த்தத்துடன் வெளிப்படுத்தும் ஒவ்வொரு செயலும், சைகையும் துன்புறுத்தல் என்றே வரையறுக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பம் மூலம் சிவப்பு நிற எமோஜீக்கள் மற்றும் சிவப்பு ரோஜாக்கள் போன்ற சமூகத்தின் வழக்கப்படி பாலியல் அர்த்தங்களுடன் தொடர்புடைய எமோஜீக்களும் இதில் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

சிறை தண்டனை

இதுபோன்ற எமோஜீக்களை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், எதிர் தரப்பில் உள்ளவர் இதன்மூலம் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்து, அனுப்பியவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் சவுதி ரியால் (இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம்) அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தினமான நேற்று இதுபோன்ற தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #WHATSAPP #HEART EMOJI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sharing red heart emoji may lead to jail in Saudi Arabia: Report | World News.