'வாட்ஸ்அப் புதிய பிரைவசி பாலிசிய ஏற்கலன்னா...' 'மே 15-க்கு அப்புறம் வாட்ஸ்அப் என்ன ஆகும்...? - புதிய தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்சப் பயன்படுத்துவோரின் தரவுகளை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அளிக்க இருப்பதாகவும், வணிக நிறுவனங்களுடன் பகிர இருப்பதாகவும் செய்தி பரவியதையடுத்து பல யூசர்கள் டெலிகிராம், சிக்னல் போன்ற மாற்றுச் ஆப்ஸ்களைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
இதன் காரணமாக வாட்ஸ்சப் நிறுவனம் அதன் தனியுரிமை விதிகளை தள்ளிவைத்து புதிய வாட்ஸ்அப் பாலிசியின் காலக்கெடு மே 15 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் வாட்ஸ்சப் நிறுவனம் அதன் புதிய கொள்கைகளை வெளியிட்டுள்ளது. அதில், WhatsApp Business-யின் புதிய தனியுரிமைக் கொள்கையைப் பின்பற்ற எந்த அழுத்தமும் இல்லை என்று நிறுவனம் கூறியுள்ளது. நிபந்தனைகளை ஏற்காமல் நீங்கள் அதைப் பயன்படுத்த முடியும். ஆனால், சில அம்சங்கள் தான் உங்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையை யூசர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் யூசரின் கணக்குகள் குறுகிய காலம் அல்லது சில வாரங்களுக்கு மட்டும் நீக்கப்படும் எனவும், எனவே ஒரு யூசர் வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்கவில்லை என்றால், மே 15லிருந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு அதாவது செப்டம்பர் மாதத்தில் அதாவது ஒரு தேதியில் யூசரின் கணக்கு நீக்கப்படும் என தெரிவித்துள்ளது.