மத்திய அரசு விதித்த புதிய விதிகளுக்கு எதிராக ‘WHATSAPP’ போர்கொடி..! வெளியான பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகள் தொடர்பான விவகாரத்தில் இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்கள், ஓடிடி சேவைகளுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த விதிமுறைகளை அமல்படுத்த மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் சமூக ஊடக நிறுவனங்கள், டிஜிட்டல் இடைமுகவர்கள் எனும் அந்தஸ்தை இழக்க வேண்டியிருக்கும். அதன் பிறகு, பிரச்சனை என வரும்போது அவை கிரிமினல் நடவடிக்கைக்கும் உள்ளாக வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகளின் செயல்பாடு தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே, புதிய விதிமுறைகளை செயல்படுவத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக பேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனமும் இதே தகவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக புதிய விதிமுறைகளை எதிர்த்து வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ்அப், டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது சமூக ஊடக உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.