ஜாக்கிரதை..!- வாட்ஸ்அப்-ல் அதிர்ஷ்டக் காத்து வீசுதா? அது உங்களுக்கு விரிச்ச மோசடி வலையா இருக்கலாம்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்வாட்ஸ்அப் மூலம் ‘அதிர்ஷ்ட கூப்பன்’ பரிசு விழுந்திருக்கிறது என்றும் நீங்கள் இவ்வளவு பணம் ஜெயித்திருக்கிறீர்கள் என்றும் உங்கள் மெசேஞ் வந்தால் அதில் உற்சாக மிகுதியில் ஈடுபடாமல் அது பண மோசடிக்காக விரிக்கப்படும் வலை என்பதை நாம் உணர வேண்டும்.
சமீப காலமாக இந்திய வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு தொடர்ச்சியாக ‘கோன் பனேகா க்ரோர்பதி’ நிகழ்ச்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கான பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ளுமாறும் குறுஞ்செய்திகள் வருகின்றன. ஹிந்தியில் ‘உங்களில் யார் அடுத்த கோடீஸ்வரர்’ என்னும் நிகழ்ச்சியை நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குவார்.
அந்த நிகழ்ச்சியின் சார்பில் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் உங்கள் மொபை எண் அதிர்ஷ்ட பரிசுக் கூப்பனை வென்றுள்ளது என்றும் அதற்கான தொகையை பெற்றுக்கொள்ளும்மாறும் மெசேஞ் செய்வார். பணம் வருகிறது எனப் பலரும் அந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு அழைக்கும் போது ஒரு டெபாசிட் தொகையை செலுத்தும்மாறு கூறி பணம் மோசடி செய்து வருகிறது கும்பல் ஒன்று.
இதுபோன்ற குறுஞ்செய்திகளைத் தவிர்க்க வேண்டும் என இந்திய அளவிலேயே போலீஸார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்த வாட்ஸ்அப் மெசேஞ்களுக்கு இன்னமும் பலர் மயங்கி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். இதுகுறித்து டெல்லி சைபர் பிரிவு போலீஸார் நாடு முழுவதும் வாட்ஸ்அப் பண மோசடி குறித்து எச்சரிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.
முதலில் எல்லாம் இந்திய ISD கோட் ஆன +91 தவிர வேறு எந்த எண்ணில் இருந்து தொடங்கினாலும் அந்த மொபைல் அழைப்புகள், குறுஞ்செய்திகளை தவிர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது +91 என்ற கோட் மூலமாகவே மோசடிகள் நடப்பதால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஆன்லைனில் பரிசு, கேஷ் ஆஃபர், பம்பர் பரிசு ஆகிய குறுஞ்செய்திகள், போன் அழைப்புகளை நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும் என போலீஸார் ஆலோசனை தெரிவித்து வருகின்றனர். அதுபோல், தொடர்ந்து குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் மெசேஞ்கள் வந்தால் அதை screenshot எடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் மக்கள் முன் வர வேண்டும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.