சத்தியமா நீங்க 'இப்படி' பண்ணுவீங்கனு எதிர்பார்க்கல...! பொறுப்புள்ள 'பதவியில' இருக்குறவர் பண்ணுற 'வேலையா' இது...? - 'வாட்ஸ்அப்' பார்த்து அதிர்ந்துப் போன பெண் நிருபர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநில கப்பல் மற்றும் உள்நாட்டு வழி செலுத்தல் கழக (Kerala Shipping and Inland Navigation Corporation) நிர்வாக இயக்குநராக இருப்பவர் பிரசாந்த் ஐ.ஏ.எஸ்.
இவர் சென்ற சிபிஎம் ஆட்சியின் போது அரசிடம் கருத்துக் கேட்காமல் கேரள கடல் பகுதியில் வெளிநாட்டு கார்ப்பரேட் கப்பல் நிறுவனங்களுக்கு மீன்பிடிக்க அனுமதி கொடுத்து உள்ளார்.
இதுகுறித்து தற்போது அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, எர்ணாகுளத்தை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரசாந்தை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், செல்போன் அழைப்புகளை அவர் ஏற்காததால், வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி கருத்துக் கேட்டுள்ளார்.
பெண் பத்திரிக்கையாளரின் மெசேஜ்க்கு பதிலாக ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரசாந்த் ஆபாச மெசேஜ் மற்றும் ஸ்டிக்கர்களை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பத்திரிக்கையாளர், தனது அலுவலகத்துக்கும், எர்ணாகுளம் பத்திரிகையாளர் சங்கத்திற்கும் தகவல் அளித்தார்.
அதன்பின் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரசாந்த் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும், மெசேஜ் குறித்த ஸ்கிரீன் ஷாட்கள் சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் மெசேஜை பிரசாந்த் அனுப்பவில்லை நான் தான் அனுப்பினேன் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையின் முடிவில், ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரசாந்த் குற்றம் செய்திருப்பது தெரியவந்துள்ளதாகக் கூறி எர்ணாகுளம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.