'புதிய பாலிசிய ஏற்கலன்னா...' 'உங்க அக்கவுண்ட கேன்சல் பண்ண மாட்டோம், ஆனா...' - வாட்ஸ் அப் நிறுவனம் நிறுவனம் வெளியிட்டுள்ள 'அதிரடி' தகவல்...!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு தங்களுடைய சேவை நிறுத்தும் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் வாட்ஸ் அப்பின் புதிய வழிமுறைகளையும், தனி நபர் கொள்கைகளை வெளியிட்டுள்ளது. அப்போது அதில் சில குழறுப்பிடிக்கள் இருப்பதாகவும், தகவல்கள் வெளியாவதற்கு வழிமுறைகள் இருப்பதாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதன்படி வாட்ஸ் அப் நிறுவனம் பல மேம்பாடுகளை செய்து, மீண்டும் புதிய அப்டேட்களை வெளியிட்டது.
அதோடு புதிய அப்டேட்களையும், தனிநபர் கொள்கையை ஏற்க கால அவகாசமும் நிர்ணயித்தது.
இந்நிலையில் தற்போது தனிநபர் கொள்கையை ஏற்காவிட்டால், கணக்கு நீக்கப்படாது என்றும் பல வசதிகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்படும் என பயனர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனம் தனது வலைதளத்தில் அளித்த விளக்கத்தில், 'புதிய கொள்கைகளை மறுஆய்வு செய்ய அவகாசம் வழங்கப்படும். அதன் பின் சில வாரங்களுக்குப் பிறகு நினைவூட்டல் அனுப்பப்படும்.
படிப்படியாக சேவைகள் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ள அந்நிறுவனம், இதன்படி, பயனாளர்கள் சேட் லிஸ்ட்டை பயன்படுத்த முடியாது.
ஆனால், இன்கம்மிங் வாட்ஸ்அப் அழைப்புகள், வீடியோ கால்களில் பேச முடியும் என்றும் நோட்டிபிகேஷன் எனேபிள் செய்திருந்தால் குறுந்தகவல்களை படித்து, பதிலளிக்க முடியும் என்றும் மிஸ்ட் போன் மற்றும் வீடியோ கால்களை அழைத்து பேச முடியும்' என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதோடு, அதன்பிறகும் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் குறுந்தகவல் அனுப்புதல், இன்கம்மிங் கால்களும் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.