என்னங்க, 2 வருஷமா 'மெசேஜ்' மட்டும் பண்றீங்க...! என்ன வந்து 'பார்க்கணும்'னு தோணவே இல்லையா...? - கிளம்பி போனவருக்கு 'லைஃப்லாங்' மறக்க முடியாத அளவுக்கு 'நடந்த' சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரு மாநிலம், கோவிந்தபுரா பகுதியை சேர்ந்த 50 வயது கொண்ட நபருக்கு வாஸ்டாப் மூலம் ஒரு நம்பரில் இருந்து குட் மார்னிங் மெசேஜ் வந்துள்ளது.
தன்னை பெண் என்று அறிமுகம் செய்துக்கொண்ட அந்த நம்பருடன் ஒரு மாதம் இரண்டு மாதம் இல்லை சுமார் இரண்டு ஆண்டுகளாக 'குட் மார்னிங்' என்று ஆரம்பித்து பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 8 -தேதி அந்த பெண் வாட்ஸ்ஆப் மூலம் லொகேஷன் ஒன்றை ஷேர் செய்து தன்னை பார்க்க வருமாறு கூறியுள்ளார். தனக்கு ஆப்பு வைக்கப் போவதை அறியாத அந்த 50 வயது நபர் ஆனந்தமாக புறப்பட்டு லொகேஷனில் குறிப்பிடப்பட்ட வீரணபாளையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் அந்த பெண்ணை பார்க்கச் சென்றுள்ளார்.
நீண்ட நாட்கள் பேசிய பெண்ணை பார்க்க சென்ற நபருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அந்த அறையில் மூன்று ஆண்கள் இருந்துள்ளனர். அந்த நபர்களோ தங்களை காவல்துறையினர் என்று அறிமுகம் செய்து கொண்டு இவரை போதைப்பொருள் கடத்தல்காரர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதோடு, அந்த நபரிடம் இருந்து கிரெடிட் கார்டு, பர்ஸ் மற்றும் தொலைபேசியை பறித்துக்கொண்டு, அவரை அறைக்குள் பூட்டிவிட்டு ஹோட்டலை விட்டு தப்பிசென்றுள்ளனர்.
சுமார் ஐந்து பரிவர்த்தனைகளில் ரூ.3,91,812 அவரது கணக்கில் இருந்து எடுக்கப்பட்டதோடு சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் மேலும் ரூ.2 லட்சம் எடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் இந்த சம்பவம் குறித்து கோவிந்தபுரா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்தவரின் தகவலின் அடிப்படையில், விரைந்து செயல்பட்ட போலீசார் மூன்று பேரில் ஒருவரை கைது செய்த நிலையில், மற்ற இருவரும் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.