'HI-னு ஒரு மெசேஜ் மட்டும் வாட்ஸ்ஆப்ல தட்டி விடுங்க...' 'சொந்த ஊருல வேலை இருக்குன்னா தேடி வரும்...' 'விரிவான விவரங்கள்...' - பிரமாதமான அறிவிப்பை வெளியிட்ட TIFAC...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தாக்கத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வேலையில்லாதவர்கள் வாட்ஸ்ஆப்பில் hi என அனுப்பினால் சொந்த ஊரிலேயே வேலையை தேடிக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு காலத்தில் பல வேற்று மாநில தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் வேலையில்லாமல் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாக சென்றனர்.
தற்போது சீரான சூழல் நிலவிவரும் நேரத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்பிய தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்காக வேற்று மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். சிலர் குடும்ப சூழலையொட்டி சொந்த பகுதிகளிலேயே கிடைக்கும் வேலையை செய்து வருகின்றனர். பலர் வேலையில்லாமல் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்
இதனை தவிர்த்து, அவர்களின் வேதனையை போக்கும் விதமாக தகவல் தொழில்நுட்பத்துறையின் சார்பில் புதிய முறை ஒன்று நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, 7208635370 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் Hi என மெசேஜ் அனுப்பினால் உள்ளூரில் இருக்கும் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் நம் தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் தொழில்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறை TIFAC -யின் செயல் இயக்குநர் பிரதீப் ஸ்ரீவஸ்தாவா, TIFAC, SAKSHAM என்ற போர்டல் ஒன்றை உருவாக்கியுள்ளார். 7208635370 என்ற எண்ணிற்கு ஒருவர் மெசேஜ் அனுப்பும்போது, அவரின் திறமை, அனுபவம் குறித்த தகவல்கள் கேட்கப்பட்டு, அவர் கொடுக்கும் பதிலின் அடிப்படையில் அவர் இருக்கும் இடத்துக்கு அருகாமையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்பு தகவல்கள் தொழிலாளரின் செல்போனின் வாட்ஸ் ஆப்புக்கு வரும். இதனைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கான வேலையை தேர்தெடுத்துக்கொள்ளலாம்.
மேலும் வாட்ஸ் ஆப் இல்லாத நபர்கள் 022-67380800 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, தங்களுக்கான வேலை குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் TIFAC -யின் செயல் இயக்குநர் பிரதீப் ஸ்ரீவஸ்தாவா கூறியுள்ளார்.