'ஒரு பக்கம் ருத்ர தாண்டவம் ஆடும் கொரோனா'... 'அமெரிக்காவை சுழற்றிய அடுத்த பயங்கரம்'... 7 பேர் பலியான பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும், அந்த கொடிய வைரசால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவை இயற்கை பேரிடர்களும் தங்கள் பங்குக்கு தும்சம் செய்துள்ளது.

அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை நேற்று முன்தினம் புயல் மற்றும் சூறாவளி கடுமையாக தாக்கியது. ஒக்லஹோமா, டெக்சாஸ் மற்றும் லூசியானா ஆகிய மாகாணங்களில் மணிக்கு 144 கி.மீ. வேகத்தில் புயல் காற்று சுழன்றடித்தது. இந்த சூறாவளி காற்றில் சிக்கிய மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது. மேலும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 1 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
சூறாவளி புயலை தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. 3 மாகாணங்களில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஏற்கனேவ கொரோனாவால் வரலாற்றில் சந்திக்காத துயரத்தை அமெரிக்கா சந்தித்து வரும் நிலையில், புயல், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர்களும் அமெரிக்காவை வதைத்து வருவது அந்த நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
