'ஆர்டர்' பண்ணுங்க... 'ஆவின் பால்', ஐஸ்கிரீம், தயிர்... அத்தனையும் உங்க 'வீடு' தேடிவரும்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 25, 2020 01:51 AM

ஊரடங்கால் தமிழக அரசு நடமாடும் கடைகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தற்போது தமிழகமெங்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆவின் பால் நிறுவனமும் தற்போது ஆன்லைன் ஆர்டர் முறையை கையில் எடுத்துள்ளது.

Aavin Milk products now Available in Zomato and Dunzo

இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''உணவு விநியோகம் செய்துவரும் சொமாட்டோ மற்றும் டன்சோ நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே ஆவின் பால் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஆவின் பால் மற்றும் வெண்ணெய், நெய் உள்ளிட்ட உபபொருட்களையும் பொதுமக்கள் ஆர்டர் செய்து பெறலாம். தற்போது ஆவின் முகவர்களுக்கான நியமன வைப்புத்தொகை ரூ.1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது,''  தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.