'இருக்குற' நோயையே 'சமாளிக்க' முடில... அதுக்குள்ள 'இந்த' நோயும் வந்திருச்சு... 'இரட்டை' தாக்குதலில் சிக்கிய நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Apr 25, 2020 01:14 AM

உலகம் முழுவதையும் கொரோனா தற்போது ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கு மருந்து எதுவும் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதால் பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் இதுவரை சுமார் 50 ஆயிரம் பேர் கொரோனாவால் இறந்து போயுள்ளனர்.

Malaria death toll rises amid COVID-19 in Zimbabwe

இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே கொரோனா, மலேரியா என இரண்டு நோய்களுக்கு மத்தியில் சிக்கித்தவித்து வருகிறது. சுமார் ஒன்றரை கோடி மக்கள் வசிக்கும் இந்நாட்டில் வழக்கமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மலேரியா அதிகமாக காணப்படும்.

தற்போது இந்நாடு மலேரியாவின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. இதுவரை சுமார் 153 பேர் மலேரியாவுக்கு பலியாகி உள்ளனர். சுமார் 1.35 லட்சம் இந்நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரம்  கொரோனாவும் இந்த நாட்டில் அதிகமாக பரவி வருகிறது. தற்போதுவரை இங்கு 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். சுமார் 3 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.

இதுதவிர கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து இங்கு ஊரடங்கு அமலில் இருப்பதால்,சுமார் 1கோடி பேர் வேலையிழந்து வருமானமின்றி பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.  இதனால் அதிக உயிர்ப்பலி வாங்கப்போவது வறுமையா? மலேரியாவா? கொரோனாவா? என்ற அச்சத்தில் ஜிம்பாப்வே மக்கள் உறைந்துபோய் உள்ளனர்.