‘அங்கெல்லாம் போகாதீங்க’!.. அப்பவே ‘எச்சரித்த’ ஜெய் ஷா.. இளம் வீரரால் இந்திய அணிக்கு ஏற்பட்ட தலைவலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து வீரர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஜெய் ஷா எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்திய அணி கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நியூஸிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியது. இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. அதற்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளதால், இந்திய வீரர்கள் அவர்களது குடும்பத்தினருடன் இங்கிலாந்திலேயே தங்கியுள்ளனர்.
இதனிடையே இந்திய வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லேசான அறிகுகள் தென்பட்டதும், அவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்பின்னர் 10 நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டதில் ஒருவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய வீரர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ‘இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி ஓரளவுக்கு பாதுகாப்பு அளிக்குமே தவிர கொரோனா வைரஸுக்கு முழு எதிர்பாற்றலையும் அளிக்காது’ என ஜெய் ஷா எச்சரிக்கை செய்துள்ளார். முன்னதாக அனுப்பிய கடிதத்தில், விம்பிள்டன், யூரோ கால்பந்து போன்ற போட்டிகளை நேரில் சென்று பார்ப்பதை தவிர்க்குமாறு ஜெய் ஷா கூறியிருந்தார்.
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய வீரர் ரிஷப் பந்த் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் நடந்த யூரோ கால்பந்து போட்டியை நேரில் பார்க்க சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rishabh Pant is the Indian player who tested positive for COVID-19 in England. (Source - Sports Tak)
— Johns. (@CricCrazyJohns) July 15, 2021

மற்ற செய்திகள்
