‘2 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று’!.. இங்கிலாந்து தொடருக்கு எழுந்த சிக்கல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு நியூஸிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியது. இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இங்கிலாந்திலேயே தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் அவர்களுக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதால், உடனே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்பு 10 நாள்கள் கழித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு வீரருக்கு மட்டும் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. தற்போது அனைத்து வீரர்களும் 10 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் பயிற்சி ஆட்டத்துக்கு சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
