‘அவ்ளோ சொல்லியும் கேட்கல’!.. ரிஷப் பந்த் மட்டுமில்ல இன்னொருத்தரும் ‘WIFE’-அ கூட்டிட்டு மேட்ச் பார்க்க போயிருக்காரு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரிஷப் பந்த் மட்டுமல்லாமல் மற்றொரு இந்திய வீரரும் யூரோ கால்பந்து போட்டியை பார்க்க சென்ற தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதால், இந்திய வீரர்கள் குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் நடந்த யூரோ கால்பந்து போட்டியை நேரில் பார்க்க சென்றிருந்தார். அங்கு சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற கொரோனா விதிமுறைகளை ரிஷப் பந்த் பின்பற்றவில்லை.
முன்னதாக கேப்டன் விராட் கோலி, அணி வீரர்கள் அறிவுரை ஒன்றை வழங்கினார். அதில், வெளியில் எங்கு சென்றாலும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களை தவிர்க்கவும், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் கோலி அறிவுரை கூறியிருந்தார்.
ஆனால் இதனை மீறி ரிஷப் பந்த், யூரோ கால்பந்து போட்டியை பார்க்க சென்றது, ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், ரிஷப் பந்த் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனை அடுத்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என வரவில்லை என்றால், இங்கிலாந்து தொடரில் அவர் ஆடுவது சந்தேகம்தான் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரிஷப் பந்த் போலவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும், தனது மனைவியுடன் யூரோ கால்பந்து போட்டியை பார்க்க சென்றுள்ளார். இதனால் பும்ராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவரும் இங்கிலாந்து தொடரில் விளையாடுவது கேள்விகுறியாகிவிடும். ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், இந்திய வீரர்கள் வெளியே சுற்றி கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
Rishabh Pant did not break any protocols. No bio bubble breach. He was vaccinated. He deserves to live his life outside of the bubble too. The mental fatigue is real. I hope he recovers soon enough in time for at least the second test. #RP17
— Anshul Kansal (@anshkansal) July 15, 2021
Where was your mask @RishabhPant17 Rishabh Pant?
Were you in England for Picnic&vacation or on a national duty? Didn’t you know, you had matches to play & with this you may catch virus. @BCCI must take strict action for such players. Firstly replace him with Sanju Samson.Enough https://t.co/PpCzagAFZI
— Akash Purohit (@earthtoakash) July 15, 2021
Rishabh Pant tested positive. Was seen without mask https://t.co/P4d88M6TJD
— Abhishek (@ImAbhishek7_) July 15, 2021