அமெரிக்காவில் 83% கொரோனா பாதிப்புக்கு இந்த வகை ‘வைரஸ்’ தான் காரணம் .. அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் அதிகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 19 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 41 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நோய் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் அமெரிக்காவில்தான் அதிகமாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை அந்நாட்டில் 3 கோடியே 42 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 லட்சம் மக்கள் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட டெல்டா வகை வைரஸ்தான் காரணம் என அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில், 83 சதவீத பாதிப்புக்கு இந்த வகை வைரஸ்தான் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.