‘இந்திய ஆல்ரவுண்டருக்கு கொரோனா பாசிடிவ்’!.. இன்று நடைபெற இருந்த டி20 போட்டி ஒத்திவைப்பு.. பிசிசிஐ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 2-வது டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் டி20 போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதனை அடுத்து 2-வது டி20 போட்டி இன்று (27.07.2021) கொழும்பு மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 8 இந்திய வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் இன்று நடைபெற இருந்த 2-வது டி20 போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. இப்போட்டி நாளை (28.07.2021) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More details here - https://t.co/dk5b0EHoHw#SLvIND https://t.co/2y3s1ve9MC
— BCCI (@BCCI) July 27, 2021

மற்ற செய்திகள்
