‘ரொம்ப ரொம்ப RARE’!.. 10 லட்சத்துல ஒன்னுதான் இப்படி இருக்குமாம்.. கேமராவில் சிக்கிய ‘அரியவகை’ குருவி..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாதி ஆண் போலவும், பாதி பெண் போலவும் தென்பட்ட அரியவகை குருவியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென் அமெரிக்க பறவையான கர்தினால் என்ற சிவப்புக்குருவி, கனடா, மெக்சிக்கோ மற்றும் கிழக்கு ஐக்கிய அமெரிக்கா பகுதிகளில் காணப்படுகிறது. இந்த வகை பறவைகளில் ஆண் குருவி சிவப்பாகவும், பெண் குருவி சாம்பல் நிறத்திலும் உள்ளது.
இதில் 10 லட்சத்தில் ஒரு பறவை அரிய வகையாக ஆணும், பெண்ணும் கலந்ததுபோல இருக்கும் என சொல்லப்படுகிறது. அதாவது ஒருபாதி சிவப்பாகவும், மறுபாதி சாம்பல் நிறத்திலும் காட்சியளிக்கும். ஆனால் இந்த அரியவகை பறவையை காண்பது மிகவும் கடினம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த அதிசய குருவியை அமெரிக்காவின் பறவை ஆர்வலர் ஜேமி ஹில் (Jamie Hill) கண்டுள்ளார். அமெரிக்கா கிராண்ட் வேலி பகுதியில் தென்பட்ட இந்த அரியவகை குருவியை ஜேமி ஹில் தனது கேமராவில் படம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த அவர், ‘48 வருடங்களாக பறவைகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்து வருகிறேன். ஆனால் இந்த அரியவகை சிவப்புக்குருவி என் கண்ணில் தென்பட்டதே இல்லை. இந்த பறவை வழக்கத்துக்கு மாறான ஓர் அழகு. இது வாழ்க்கையில் ஒருமுறையே கிடைக்கும் வாய்ப்பு’ என ஜேமி ஹில் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
