ஒருவேளை அந்த 'ஆல்ரவுண்டர' எடுக்க போறாங்களோ?.. 'சிஎஸ்கே'வின் சூசக ட்வீட்டால்.. 'குழம்பி' தவித்த ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 20, 2019 02:52 PM

கடந்த ஆண்டு 1 ரன்னில் சாம்பியன் வாய்ப்பை நழுவவிட்ட சென்னை அணி இந்தமுறை கண்டிப்பாக கப்பை அடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது. சமீபத்தில் தன்னுடைய அணியில் இருந்து 5 இளம்வீரர்களை சென்னை அணி கழட்டி விட்டது. இதனால் வரும் ஏலத்தில் சென்னை அணி ஏகப்பட்ட இளம்வீரர்களை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

chennai super kings released players jersey numbers

இந்தநிலையில் சற்றுமுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணி 20 நம்பர்களை பதிவிட்டு இன்று 20-ம் தேதி 2020-ம் ஆண்டு அணியில் விளையாடப்போகும் முதல் 20 வீரர்களின் பட்டியல் என அவர்களின் ஜெர்ஸி நம்பர்களை வெளியிட்டுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். ஏனெனில் சில ஜெர்ஸி நம்பர்களை சூசகமாக சென்னை அணி வெளியிட்டுள்ளதாக ரசிகர்கள் நினைக்கின்றனர்.

எனினும் ஜெர்ஸி நம்பர் 1- முரளி விஜய் 2- மோனு சிங்  3- சுரேஷ் ரெய்னா 7-டோனி 8- ஜடேஜா 9- ராயுடு 13- டூ பிளேசிஸ் 17- ருத்ராஜ் கெய்க்வாட் 22- லுங்கி நிகிடி 24- கே.எம்.ஆசிப் 27- ஹர்பஜன் சிங் 31 - கரண் சர்மா 33- வாட்சன் 47- பிராவோ 54- ஷர்துல் 74- சாண்ட்னெர் 81- கேதார் ஜாதவ் 90- தீபக் சாஹர் 99- இம்ரான் தாஹிர். என சிஎஸ்கே வீரர்கள் அணிந்திருக்கும் ஜெர்ஸிகளை ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டனர்.

ஆனால் 12-ம் நம்பர் ஜெர்சி யாருடையது என ரசிகர்கள் குழம்பி தவித்தனர். இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் 12-ம் நம்பர் கொண்ட ஜெர்ஸியை அணிவார். அப்படி என்றால் அவரை ஏலத்தில் எடுக்க போகிறார்களா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் 12-ம் நம்பர் ஜெர்ஸி ஜெகதீசன் நாராயணன் என்னும் இளம் வீரருடையது ஆகும்.

சென்னை அணி என்ன தான் தலைமுடியை பிய்த்துக்கொள்ள வைத்தாலும், தாங்கள் புத்திசாலிகள் என அனைவரின் ஜெர்ஸி நம்பர்களையும் சொல்லி ரசிகர்கள் நிரூபித்து விட்டனர். தற்போது சென்னை அணி 20 வீரர்களை அணியில் தக்க வைத்துள்ளது.

Tags : #CSK #IPL