'இதுதான் கொரோனாவிற்கு மருந்து...' 'உங்க முன்னாடியே குடிச்சு காட்டுறேன்...' இதுவரைக்கும் எங்க நாட்டுல யாருமே சாகல...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | May 05, 2020 11:34 AM

கொரோனாவிற்கு என்று எங்கள் நாட்டில் மூலிகை மருந்தை பயன்படுத்துகிறோம். அதனால் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என அறிவித்துள்ளார் மடகாஸ்கர் அதிபர்.

President of Madagascar claims to use herbal medicine for Corona.

கொரோனா வைரஸின் வீரியத்தைக் கட்டுப்படுத்த ஒரு சில நாடுகளில் மலேரியா மருந்துகளை உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில் மடகாஸ்கர் தீவில் காணப்படும் ஆர்டிமீஸியா என்ற தாவரத்தில் இருந்து மலேரியாவுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.

அதனால் இந்த ஆர்டிமீஸியா தாவரம் கொரோனா நோயையும் அழிக்க வல்லது என்று மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை மருந்திற்கு கோவிட் ஆர்கானிக்ஸ் என்று பெயரிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் நாட்டில் உயிரிழப்பு ஏதுமில்லை என்று கூறிய அதிபர் மலகாசி மருத்துவ ஆராய்ச்சி மையம் இந்த மருந்தை உருவாக்கியுள்ளதாகவும் கூறிய ஆன்ட்ரோ செய்தியாளர்கள் முன்னிலையில் அதனை அருந்தியும் காட்டினார்.  இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் ஆன்ட்ரோ வெளியிட்டுள்ளார்.