வீட்டுக்குள் சோதனை செஞ்ச போலீஸ்.. சுவர் ஓரத்தில் இருந்த கரடி பொம்மை.. "கிட்ட போய் பாத்தப்போ தான்".. பரபரப்பு சம்பவம்
முகப்பு > செய்திகள் > உலகம்வீட்டிற்குள் போலீசார் சோதனை மேற்கொண்டு வந்த சமயத்தில், அங்கே ஓரத்தில் இருந்த கரடி பொம்மைக்கு அருகே சென்றதும் ஒரு நிமிடம் அவர்கள் அதிர்ந்து போயினர்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, கார் ஒன்று திருடு போனதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், அந்த காரை திருடி சென்ற நபர், அருகே இருந்த பெட்ரோல் பங்க்கிலும் பணம் செலுத்தாமல், பெட்ரோல் போட்டு தப்பிச் சென்றதாகவும் புகார் ஒன்று எழுந்துள்ளது.
இது தொடர்பாக, மான்செஸ்டர் பகுதி போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு திருடன் யார் என்பதை தேடியும் வந்தனர்.
அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், காரை திருடி சென்ற திருடன் ஒரு முகவரியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து, அந்த இடத்திற்கு போய் வீட்டிற்குள் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அந்த வீட்டிற்குள் பெரிய கரடி பொம்மை, சுவர் ஓரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் இதனை போலீசார் பெரிதாக கருதவில்லை என கூறப்படும் நிலையில், ஒரு போலீஸ் அதன் அருகே கடந்து சென்ற போது, அந்த கரடி பொம்மை, மூச்சு விடுவதை போல உணர்ந்துள்ளார். உடனடியாக, அந்த பொம்மையை மாற்றி பார்த்த போது, கடந்த ஒரு மாதத்திற்கு மேல் தேடப்பட்டு வந்த கார் திருடன், அதற்குள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், தற்போது சிறையில் அடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த திருடன், கரடி பொம்மைக்குள் மறைந்து இருந்து தப்ப முயன்று, பின்னர் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மேலும், இது தொடர்பான பேஸ்புக் பதிவு ஒன்றையும் மான்செஸ்டர் போலீசார் வெளியிட்டுள்ளனர். நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாக தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read | "சுத்தி 128 பிளாட்'ல இவரு தான் ஒரே ஆளு.." தனியாக வாழும் முதியவர்.. "இப்போ பேய் நகரம் மாதிரி இருக்காம்.."

மற்ற செய்திகள்
