கல்யாணம் பண்ண சொல்லி வற்புறுத்திய காதலன்.. கதையை முடிக்க SKETCH போட்டுக் கொடுத்த காதலி.? களத்துல குதிச்ச நண்பர்கள்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாணியம்பாடியில் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய காதலனை நண்பர்களை ஏவி காதலி தாக்கியதாக சொல்லப்படும் சம்பவம் அப்பகுதி முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காதல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரும் ஏலகிரி மலைப் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சக்திவேல் தனது காதலியிடம் திருமணம் குறித்து அவ்வப்போது பேசி வந்திருக்கிறார். இதனிடையே ஒருநாள் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சக்திவேல் வற்புறுத்தியதாக தெரிகிறது.
இதனையடுத்து, அந்த இளம்பெண் தனது நண்பர்களான சாந்தகுமார், பூவரசன், ஹரி உள்ளிட்ட 5 பேரிடம் இந்த விஷயத்தை சொல்லியிருக்கிறார். இதனை தொடர்ந்து, 5 பேர்கொண்ட கும்பல் சக்திவேல் வசிக்கும் பகுதியான திருமாஞ்சோலைக்கு வந்திருக்கிறது. அங்கே சக்திவேலை சந்தித்த கும்பல், இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தவேண்டாம் என எச்சரித்திருக்கின்றனர். அப்போது இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் எல்லை மீறிப்போகவே, 5 பேரும் சக்திவேலை தாக்கியுள்ளனர்.
சுற்றி வளைத்த மக்கள்
இந்நிலையில், சக்திவேலுக்கு கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடிவந்திருக்கின்றனர். பொதுமக்களை பார்த்ததும் சாந்தகுமார், பூவரசன், ஹரி ஆகியோருடன் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கின்றனர். இதனையடுத்து சக்திவேலை தாக்கிய மூவரையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, வாணியம்பாடி காவல்துறையினரிடம் அந்த 3 பேரையும் பொதுமக்கள் ஒப்படைத்திருக்கின்றனர். திருமாஞ்சோலை குடியிருப்பு பகுதியில் இருந்த பொதுமக்கள் தாக்கியதால் படுகாயம் அடைந்த சாந்தகுமார், பூவரசன், ஹரி ஆகிய மூவரையும் வாணியம்பாடி அரசு மருத்துவனையில் சேர்ந்திருக்கின்றனர் காவல்துறையினர். மேலும், தப்பியோடிய 2 பேரை போலீஸ் அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும், இந்த தாக்குதலுக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். வாணியம்பாடியில் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய காதலன், காதலியின் நண்பர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
