35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானம்.. திடீரென உடைந்த கண்ணாடிகள்.. விமானி செய்த காரியம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் கண்ணாடி உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று லண்டனில் இருந்து கோஸ்டாரிகா நாட்டில் உள்ள சான் ஜோஸ் நகருக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது மற்றொரு ஜெட் விமானம் இந்த விமானத்திற்கு 1000 அடி உயரத்துக்கு மேல் பறந்து கொண்டிருந்தது.
அந்த சமயம் மேலே பறந்த விமானத்தில் இருந்து பனிக்கட்டி குவியல் பிரிட்டன் விமானத்தில் கண்ணாடியில் பலமாக விழுந்தது. அதனால் இரு அங்குல தடிமன் கொண்ட கண்ணாடியில் பலத்த விரிசல் ஏற்பட்டது. இதனால் விமானி அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து சாதுர்யமாக செயல்பட்ட விமானி, சான் ஜோஸ் நகரில் விமானத்தை பத்திரமாக தரை இறங்கினார். அதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
