VIDEO: 'இஷாந்த் ஷர்மாவிடம் விராட் கோலி கேட்ட கேள்வி...' பதிலை கேட்டு விமானத்துல இருந்த யாராலையும் சிரிப்ப கண்ட்ரோல் பண்ண முடியல...! - டிரெண்டிங் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் கலகலப்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

டிசம்பர் மாதம் வரும் 26-ஆம் தேதி தென் ஆப்பரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையே கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அடங்கிய இந்திய அணி நேற்று அதிகாலை விமானம் மூலம் தென் ஆப்பரிக்காவிற்கு புறப்பட்டது.
அப்போது விராட் கோலி விமானத்தில் இருந்து இந்திய அணி வீரர்களோடு அரட்டையடித்து கலகலப்பாக பேசி சிரித்துள்ளார். ஒவ்வொருவரிடமும் சென்று அவர்களை கலாய்த்துள்ளார் விராட். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், இஷாந்த் ஷர்மாவிடம் சென்ற விராட் 'உலகம் முழுவதும் சுற்றுவதற்கு தேவையான பொருட்களையும் கொண்டுவந்து விட்டாயா இஷாந்த் பாய்?' எனக் கேட்டுள்ளார்.
உடனே இஷாந்த்தும் சிரித்து கொண்டே 'என்ன கலாய்க்காதே விராட் சும்மா இரு' என கூறியுள்ளார். இஷாந்தின் கோபம் கலந்த சிரித்த முகத்தை பார்த்த விராட் சிரிப்பை அடக்கமுடியாமல் வாய்விட்டு கத்தி சிரிக்கும் போது அந்த விமானத்தில் இருந்த அனைவரும் சிரித்துள்ளனர்.
தற்போது இந்த வீடியோ பிசிசிஐமூலம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதை பார்த்த விராட் ரசிகர்களோ எங்கள் தலைவரை பிசிசிஐ இனியில் சீண்டாமல் இருக்க வேண்டும் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
அதோடு பிசிசிஐக்கும், கோலிக்கும் இடையில் பிரச்சினை நிலவுவதாக கூறப்படும் நிலையில், கோலி அதைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்காமல், சக வீரர்களுடன் மனம் விட்டுப் பேசி சிரித்தது வரவேற்பை பெற்று வருகிறது.
From Mumbai to Jo'Burg! 👍 👍
Capturing #TeamIndia's journey to South Africa 🇮🇳 ✈️ 🇿🇦 - By @28anand
Watch the full video 🎥 🔽 #SAvINDhttps://t.co/dJ4eTuyCz5 pic.twitter.com/F0qCR0DvoF
— BCCI (@BCCI) December 17, 2021

மற்ற செய்திகள்
