VIDEO: 'டேக் ஆப் ஆன கொஞ்ச நேரத்துல...' 'திடீர்னு மளமளவென பற்றி எரிந்த தீ...' - அலெர்ட் ஆன விமானியின் வியக்க வைத்த செயல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்யுனெடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் அதன் இஞ்சினில் பற்றி எரிந்த காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் கொலோரோடா மாகாணத் தலைநகர் டெனவர் விமான நிலையத்தில் இருந்து ஹோனாலு நகருக்கு 777-200 ரக விமானம் 231 பயணிகள் மற்றும் 10 சிப்பந்திகளுடன் புறப்பட்ட யுனெடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777-200 ரக விமானம் டேக் ஆஃப் ஆன சிறிது நேரத்திலேயே விமானத்தின் இஞ்சினில் தீ பற்ற தொடங்கியுள்ளது.
இன்ஜின் முழுவதும் தீ எரிய தொடங்கி ராக்கெட் போல புகை கசிந்து தீ சுழன்று அடித்தது. பெரும் விபத்து நடக்கவிருந்த சூழலில் விமானி சமார்த்தியமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் டெனவர் விமான நிலையத்துக்கு திருப்பி பத்திரமாக தரையிறக்கினார். இந்த தீடீர் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தரையில் சிதறி கிடக்கும் இன்ஜின் பாகங்களை யாரும் தொட வேண்டாம் என அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு கழகம் கூறியுள்ளது.
இன்ஜினில் தீ பற்றிய இந்த விமானம் 26 ஆண்டுகள் பழமையானது. இன்ஜினில் உள்ள மின் விசிறியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பற்றியதாக சொல்லப்படுகிறது.
விமான விபத்து குறித்து யுனைடெட் ஏர்லைன்ஸின் விமானிகள் தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தீடிரென ஏற்பட்ட இந்த இயந்திர செயலிழப்பின் போதும், பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய விமானிகளை பாராட்டுகிறோம். இது போன்ற அரிதான இயந்திர செயலிழப்பின் போதும் விமானிகள் தங்கள் திறமையை நிரூபித்து பயணிகளின் உயிரை பாதுகாத்துள்ளனர். எங்கள் விமானிகள் தகுதியானவர்களாகவும் திறமைமிக்கவர்களாக இருப்பதை கண்டு பெருமை கொள்கிறோம்' எனக் கூறியுள்ளனர்.
A passenger filmed the burning engine of a United Airlines Boeing 777 that made an emergency landing at Denver International Airport.
Read more: https://t.co/4a1jka1tR3 pic.twitter.com/bkKQK10CQ0
— Al Jazeera English (@AJEnglish) February 21, 2021