‘நடுவானில் மாயமான விமானம்’!.. ‘2 நாள் கழித்து கடலில் மிதந்த விமானத்தின் பாகங்கள்’!.. 38 பயணிகளின் கதி என்ன..?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Dec 12, 2019 04:15 PM

சில தினங்களுக்கு முன்பு காணாமல் போன சிலி நாட்டு ராணுவ விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Chile missing C130 plane Floating debris found in the ocean

கடந்த திங்கள் கிழமை சிலி நாட்டின் பண்டா அரேனாஸ் பகுதியில் இருந்து அண்டார்டிகா நோக்கி 38 பயணிகளுடன் ராணுவ விமானம் ஒன்று சென்றது. புறப்பட்ட 1 மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. இதனை அடுத்து விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தென் அமெரிக்காவுக்கும், அண்டார்டிக்காவிற்கும் இடையே உள்ள கடல் பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது. கடைசியாக தொடர்பில் இருந்த இடத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் பயணம் செய்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

Tags : #CHILE #C130 #ANTARCTICA #AIRFORCE #PLANE