'லாக்டவுன் நேரத்துல மண்டபத்துல கல்யாணம் பண்றது ரிஸ்க்...' பேசாம 'அத' வாடகைக்கு எடுத்துட வேண்டியது தான்...! - அட்டகாசமான ஐடியாவ போட்டு திருமணம் செய்த ஜோடி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் ஒன்றும் விதிவிலகில்லாமல் அதன் பரவல் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டிருக்கிறது.

தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக பல்வேறு தடைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதில் திருமணமும் துக்க நிகழ்வுகளும் கூட அடங்கும்.
ஆனால் ஒரு சிலர் இந்த கொரோனா பீதியிலும் குதுகலமாக திருமணம் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் தான் வானில் பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ராகேஷ் - தீக்ஷனா தம்பதியினர்.
மதுரையை சேர்ந்த ராகேஷ் - தீக்ஷனா தம்பதியினர் திருமணம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்ததால் குறித்த நாளில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். மண்டபத்தில் செய்தால் தேவையில்லாமல் ஏதாவது நிபந்தனைகள் வரும் என்ன யோசித்த மணமகனோ ஒரு விசித்திர முடிவை எடுத்துள்ளார்.
ராகேஷ் தனது திருமண நாளின் போது ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து அதில் பெண் வீட்டார் மற்றும் மாப்பிளை வீட்டார் நெருங்கிய உறவினர்கள் என்ன 100-க்கும் மேற்பட்டோருக்கு டிக்கெட் புக்கிங் செய்துள்ளார்.
அதன்படி தன் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த விமானத்தில், அந்த ஜோடிகள் உறவினர்கள் முன்பு பறக்கும் விமானத்தில் பயணித்தபடி திருமணம் செய்துள்ளனர்.
விமானத்தில் பயணித்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. .

மற்ற செய்திகள்
