"நம்ம 'கண்ணையே' நம்மளால நம்ப முடியலேயே..." இணையத்தில் அதிக 'லைக்குகளை' அள்ளிக் குவித்த வைரல் 'புகைப்படம்'!!... 'பின்னணி' என்ன??..
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக தற்போதைய காலகட்டத்தில் வடக்கு அரைக்கோளம் (northern hemisphere) பகுதிகளில் வாழும் மக்கள் கடும் பனியில், அதிக குளிரில் வாழ்ந்து வரும் சமயம் இது.

இந்நிலையில், கடும் பனியில் காற்றில் உறைந்து போய் நிற்கும் முட்டை மற்றும் நூடுல்ஸ் ஆகியவற்றின் புகைப்படத்தை ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை சைபீரியா (Siberia) என்னும் பகுதியில் வாழும் நபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பகுதியில் -45 டிகிரி செல்ஸியஸ் நிலவியதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Today it's -45C (-49F) in my hometown Novodibirsk, Siberia. pic.twitter.com/EGxyrRqdE2
— Oleg (@olegsvn) December 27, 2020
கிட்டத்தட்ட அந்தரத்தில் முட்டையும், நூடுல்ஸும் நிற்பது போன்ற ஒரு உணர்வை தரும் இந்த புகைப்படம் நெட்டிசன்களிடையே தற்போது அதிகம் லைக்குகளை அள்ளியுள்ள நிலையில் வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல், பலரும் பல விதமான கமெண்ட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, அண்டார்டிகாவின் கன்கார்டியா ஸ்டேஷன் பகுதியில் உணவு பொருட்கள் இதே போன்று உறைந்து நிற்கும் புகைப்படங்கள் அதிகம் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
