‘10 மாத ஆண் குழந்தை உட்பட 67 பேருக்கு கொரோனா!’.. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்வு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 29, 2020 08:48 PM

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்த நிலையில் மேலும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

TN reports 8 new positive cases from Erode including 10 months baby

நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பில் இருந்த 8 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் 8 பேரும் ஈரோடு மாவட்டத்தை

சேர்ந்தவர்கள் என்றும்  மேலும் இவர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இதில் 10 மாத ஆண்குழந்தையும் அடக்கம் என்றும் கூறிய அவர் இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரித்தார். இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்தார். ஆனால் இன்றைய தினம் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. 

Tags : #CORONA #CORONAVIRUS #TNHEALTH