'டிரைலர் முடிஞ்சுது!.. இனி மெயின் பிக்சர் தான்'!.. தாலிபான் அரசு பதவியேற்பு விழா!.. சிறப்பு விருந்தாளி யார் தெரியுமா?.. உலக அரசியலை புரட்டிப் போடும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Sep 06, 2021 09:08 PM

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதைத் தொடர்ந்து, கடந்த 15ம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தாலிபான்கள் வசம் சென்றது.

taliban finalise afghan govt formation china russia

இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

இதற்கிடையே, தாலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர். பொது மக்கள் மட்டுமன்றி அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் என பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடுகின்றனர்.

ஆனால், இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தாலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். ஏற்கனவே, இது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு தாலிபான் தலைவர்களையும் சந்தித்து பேசி வந்தனர்.

இதைதொடர்ந்து, ஆப்கானில் உள்ள கந்தகாரில் தாலிபான் தலைவர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரான் நாட்டில் உள்ள ஆட்சி முறை போல ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி முறையை கொண்டு வர தாலிபான்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாலிபான் இயக்கத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் பதவி வழங்கும் வகையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தாலிபான்களின் தலைவரான முல்லா ஹைபத்துல்லா அஹுன்ஸாடா புதிய அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராக இருப்பார் என்று தாலிபான்களின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் அனாமுல்லா சமங்கனி தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இன்று காபூலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "போர் முடிந்துவிட்டது, நிலையான ஆப்கானிஸ்தான் வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆயுதம் எடுக்கும் எவரும் மக்களுக்கும், நாட்டிற்கும் எதிரி" என கூறினார்.

இந்த நிலையில் தான், ஆப்கானிஸ்தானில் அரசு அமைப்பது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், புதிய அரசு பதவி ஏற்கும் விழாவுக்கு பாகிஸ்தான், துருக்கி, கத்தார், ரஷியா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு தாலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில், தாலிபான்கள் அழைப்பு விடுத்திருக்கும் நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் எதிரி நாடுகள் ஆகும்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Taliban finalise afghan govt formation china russia | World News.