சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொன்னா மட்டும் போதும்.. இந்த அற்புதமான வேலைக்கு ஆட்கள் தேடும் ஹோட்டல்.. சம்பளம் எவ்ளோன்னு கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Sep 06, 2021 08:06 PM

உணவை சாப்பிட்டு பார்த்து நன்றாக இருக்கிறதா என சொல்வதற்காக ஹோட்டல் ஒன்று வேலைக்கு ஆட்கள் எடுக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Restaurant wants to pay someone to eat roast potatoes

இங்கிலாந்தில் உள்ள The Botanist என்ற உணவகம் விநோத அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வறுத்த உருளைக் கிழங்கை சுவைத்துப் பார்த்து Review சொல்ல ஆட்களை தேடி வருவதாக தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சுவையான உணவை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Restaurant wants to pay someone to eat roast potatoes

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வரும் செப்டம்பர் 19-ம் தேதி தான் கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 500 வார்த்தைக்கும் மிகாமல் வறுத்த உருளைக் கிழங்கு குறித்து Review எழுத வேண்டும். மேலும் இதுகுறித்து டிக்டாக் அல்லது இன்ஸ்டாகிராமில் 60 விநாடிக்கு மிகாமல் ஒரு வீடியோவையும் பதிவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Restaurant wants to pay someone to eat roast potatoes

இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களுக்கு சுமார் 40,000 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும் என  The Botanist உணவகம் தெரிவித்துள்ளது. உணவகங்களில் சாப்பிட்டு Review சொல்லும் நபர்களுக்கு இந்த வேலை ஒரு வரப்பிரசாதம் என பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Restaurant wants to pay someone to eat roast potatoes | World News.