எடைக்கு எடை தங்கம் தான் சீர்வரிசை..! மகள் திருமணத்தில் மொத்த பேரையும் வாயை பிளக்கவைத்த பாசக்கார அப்பா ...
முகப்பு > செய்திகள் > உலகம்துபாயில் நடைபெற்ற திருமணத்தில் தனது மகளுக்கு எடைக்கு எடை தங்கத்தை சீர்வரிசையாக ஒருவர் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
Images are subject to © copyright to their respective owners.
திருமணம் என்பதே பெரும் உழைப்பையும் செலவையும் கோரும் செயல்முறை. குறிப்பாக மணப்பெண் வீடுகளில் தான் அதிக செலவு இருக்கும். கலாச்சார முறையில் பல நாடுகளிலும் இதே சூழ்நிலையே காணப்படுகிறது. மணப்பெண்ணுக்கு அவருடையய குடும்பத்தினர் சீர்வரிசை பொருட்களை காலங்காலமாக அளித்து வருகின்றனர். இந்தியா மட்டும் அல்லாது பல நாடுகளிலும் இந்த நடைமுறை இருக்கிறது. சில தொழிலதிபர்கள் மற்றும் பெரும் புள்ளிகள் தங்களது மகளுக்கு ஊரே வியக்கும்படி சீர்வரிசைகளை கொடுப்பது குறித்து கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் துபாயில் நடைபெற்ற கல்யாணத்தில் தனது மகளுக்கு எடைக்கு எடை தங்கத்தை தந்தை ஒருவர் கொடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
Images are subject to © copyright to their respective owners.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயை சேர்ந்த தொழிலதிபர் அண்மையில் தனது மகளுக்கு திருமணம் நடத்த முடிவெடுத்திருக்கிறார். அவர் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர் என தெரிகிறது. திருமணத்தில் தனது மகளின் எடைக்கு எடை தங்கம் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார் அந்த தொழிலதிபர். அதன்படி, திருமணம் நடைபெறும் இடத்தில் தங்க கட்டிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
அங்கிருந்த பிரம்மாண்ட தராசில் ஒருபுறம் இளம்பெண் அமர்ந்திருக்க அவருக்கு அடுத்துள்ள தட்டில் தங்க கட்டிகள் அடுக்கப்படுகின்றன. இதனை அந்த திருமணத்திற்கு வந்த அனைவரும் திகைத்துப்போய் பார்க்கின்றனர். இந்த வைபவத்தில் சுமார் 70 கிலோ தங்கம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வரும் நிலையில் திருமணம் எங்கே நடந்தது?, தம்பதி மற்றும் தொழிலதிபரின் பெயர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் பாகிஸ்தானில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி குறித்தும் சிலர் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
Also Read | காதலனுக்கு Good Bye.. 54 வயசு முதியவரை திருமணம் செய்த இளம்பெண்.. இப்ப இப்படி ஒரு சிக்கலா.?