ரூ. 247 கோடியை நன்கொடையா கொடுத்துட்டு பெயரை கூட சொல்லாம போன மர்ம மனிதர்.. திகைச்சுப்போன அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவிற்கு பாகிஸ்தானை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 247 கோடி ரூபாய்) நன்கொடையாக அளித்திருக்கிறார். இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எழுதிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த வார திங்கட்கிழமை காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அந்நாடே ஸ்தம்பித்துப்போனது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் ஒருபக்கம் அதிகரித்து வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் அண்டை நாடுகளான சிரியாவையும் கடுமையாக பாதித்திருக்கிறது. இதனிடையே துருக்கியில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அந்நாட்டு அதிபர் எர்டோகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ பல நாடுகள் முன்வந்தன. அதன்படி மீட்புக்குழு, மருத்துவ குழு ஆகியவற்றை இந்தியா உட்பட பல நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு வழங்கி வருகின்றன.
Images are subject to © copyright to their respective owners.
இந்த சூழ்நிலையில் பெயர் தெரியாத பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவிற்கு 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்திருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த ட்வீட் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இது தொடர்பாக ஷெபாஸ் ஷெரீஃப் எழுதியுள்ள பதிவில்,"அநாமதேய பாகிஸ்தானியர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள துருக்கிய தூதரகத்திற்குள் நுழைந்து, துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக $30 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியதை அறிந்து மனம் நெகிழ்ந்தேன். இத்தகையை மனிதாபிமான செயல்பாடுகள் தான் கடக்க முடியாத முரண்பாடுகளை நாம் வெற்றிக்கொள்ள ஒரே வழியாகும்" என ஷெரீஃப் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
