தோனி & ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்.. இதுக்கு முன்பும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு.. இந்திய அணியை துரத்தும் சோகம்.. வைரல் வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Pichaimuthu M | Feb 24, 2023 10:46 AM

நேற்று நடந்த  ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி, ஐந்து ரன் வித்தியாசத்தில்  தோல்வியடைந்தது.

MS Dhoni Harmanpreet Kaur Same type of run out in semi finals

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | Bakasuran : "அமிர் சாரிடமிருந்து இந்த கருத்தை எதிர்பார்க்கல.. பெரிய இயக்குனரே இப்படி சொல்வது வேதனையானது" - பகாசூரன் மோகன்.ஜி.!

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பெத் மூனி 37 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அரை சதம் அடித்தார். மூனிக்கு ஆதரவாக கேப்டன் மெக் லானிங் (49*) மற்றும் ஆஷ்லே கார்ட்னர் (31*) சிறப்பாக விளையாடினர்.

நான்கு ஓவர்கள் பந்து வீசி 2/32 என்ற கணக்கில் ஷிகா பாண்டே சிறப்பாக செயல்பட்டார். ராதா யாதவ், தீப்தி சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

173 ரன்களை துரத்திய இந்திய அணி 28/3 என தடுமாறியது. பின்னர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஹர்மன்பிரீத் இடையேயான 69 ரன் பார்ட்னர்ஷிப் இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. ஹர்மன்பிரீத் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.   ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டத்தின்  முக்கியமான கட்டத்தில் 52 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட போதிலும் ஹர்மன்ப்ரீத் கவுர் சிறப்பாக விளையாடியது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

MS Dhoni Harmanpreet Kaur Same type of run out in semi finals

Images are subject to © copyright to their respective owners.

இருப்பினும் ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி  ஆட்டத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் ரன் அவுட் இந்திய ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இங்கிலாந்தில் நடந்த 2019 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்திற்கு எதிராக அதே அரையிறுதி ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனியின் ரன் அவுட் காட்சிகள் ஹர்மன்ப்ரீத் கவுரின் ரன் அவுட் காட்சிகளை நினைவுக்கு கொண்டு வந்தது.

MS Dhoni Harmanpreet Kaur Same type of run out in semi finals

Images are subject to © copyright to their respective owners.

இறுதியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் கார்ட்னர் மற்றும் டார்சி பிரவுன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜெஸ் ஜோனாசென், மேகன் ஷட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய வீராங்கனை கார்ட்னர் ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருதை வென்றார்.

இந்தியா அணி இந்த போட்டியில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறிது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரின் சிறந்த ஆட்டங்கள் வீணானது.

MS Dhoni Harmanpreet Kaur Same type of run out in semi finals

Images are subject to © copyright to their respective owners.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக், தமது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “மேட்ச் வின்னரான ஒருவர் கிரீஸில் இருக்கும் போது  அரையிறுதியில் ரன் அவுட் ஆகும் சம்பவம் இதற்கு முன்பும் ஏற்பட்டுள்ளது. இந்த மனவேதனை ஏற்கனவே நமக்கு ஏற்பட்டது தான். இந்திய மகளிர் அணி வெளியேறியது வருத்தம் அளிக்கிறது. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது ஏன் கடினமானது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.” என்று வீரேந்திர சேவாக் ட்வீட் செய்துள்ளார்.

Also Read | “வலதுபுற மார்பகத்தையே அகற்றிட்டாங்க” .. 'அங்காடித் தெரு’ சிந்துவுக்கு இப்படி ஒரு கஷ்டமா.. கலங்க வைக்கும் பேட்டி! வீடியோ

Tags : #CRICKET #MS DHONI #HARMANPREET KAUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MS Dhoni Harmanpreet Kaur Same type of run out in semi finals | Sports News.