'கொரோனா பாதிப்பை குறைத்துள்ள தடுப்பூசி'... 'அமெரிக்கா இதை செய்திருந்தால்'... ஆய்வில் வெளியாகியுள்ள தகவல்...
முகப்பு > செய்திகள் > உலகம்பிசிஜி தடுப்பூசி திட்டம் அமலில் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளதாக அமெரிக்க ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பிசிஜி எனும் காசநோய் தடுப்பு மருந்து இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சிறு வயதில் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த மருந்து வழங்கப்படும் நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளதாகவும், இந்த தடுப்பூசி திட்டம் அமலில் இல்லாத நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் பரவல் 4 மடங்கு அதிகமாக உள்ளதாகவும் அமெரிக்காவின் நியூயார்க் தொழில்நுட்ப கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அட்வான்ஸ்மென்ட் ஆப் சயின்ஸ் பார் தி அமெரிக்கன் அசோசியேஷனும் இதையே கூறியுள்ளது.
அதன் ஆய்வறிக்கையில், "பிசிஜி தடுப்பூசி திட்டம் அமலில் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குறைவாக உள்ளது. அமெரிக்காவும் பிசிஜி தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்தியிருந்தால் நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்திருக்கும். ஆனால் இந்த தடுப்பூசி வைரஸ் பரவல் வேகத்தை குறைக்குமே தவிர, இதுவே சிறந்த மருந்து கிடையாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "இந்தியாவில் 16 வகையான கொரோனா தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன. அதில் ஒன்றான பிசிஜி தடுப்பூசியின் 3ஆம் கட்ட ஆய்வு தொடர்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
