'கொரோனா காலத்திலும் ரூ 11.5 லட்சம் கோடி முதலீடு'... 'இந்தியாவிற்கு படையெடுக்கும் நிறுவனங்களால்'... '12 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட 22 நிறுவனங்கள் இந்தியாவில் ரூ 11,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய உள்ளன.

கடந்த ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அங்கு தொழில் புரிந்துவந்த நிறுவனங்கள் பலவும் அந்நாட்டை விட்டே வெளியேறின. இதையடுத்து சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் முதலீடு செய்யத் தொடங்கிய அந்நிறுவனங்கள் குறிப்பாக இந்தியாவில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் மொபைல் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், ஆப்பிள் நிறுவனத்துக்கு சப்ளை செய்யும் நிறுவனங்கள் என மொத்தமாக 22 நிறுவனங்கள் 1.5 பில்லியன் டாலரை முதலீடு செய்ய உள்ளன. இந்த முதலீடுகள் மூலமாக இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ 11.5 லட்சம் கோடி மதிப்புக்கு செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கப்படவிருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவிஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக அமைக்கப்படும் ஆலைகள் மூலமாக, இந்தியாவில் 3 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 9 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் உற்பத்தியை தொடங்கும் இந்த நிறுவனங்களுக்காக மத்திய அரசு ரூ 41,000 கோடியை உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக ஒதுக்கியுள்ளது. இச்சலுகையைப் பெற 22 நிறுவனங்கள் ஆர்வத்துடன் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாகவும், இந்தியாவின் உற்பத்தி வருவாய் விரைவில் ரூ 10 லட்சம் கோடியைத் தாண்டும் எனவும் ரவி ஷங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
