'ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 3 தடுப்பூசிகள்...' இந்திய மக்களுக்கு எப்போது தான் கிடைக்கும்...? - உச்சக்கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய நாட்டின் 74-வது சுதந்திர தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது, இந்தியாவில் 3 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறது எனக்கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியா தனது 74-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. அப்போது இந்தியாவின் தற்போதைய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் கொரோனா வைரஸ் குறித்து கூறும் போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிய கடுமையாக முயற்சித்து வருவதாக கூறினார்.
மேலும் கொரோனா வைரஸுக்கு எதிராக போராட இந்தியாவில் ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று கோவிட் -19 தடுப்பூசிகளை இந்தியா ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து தற்போது, இந்தியாவில் கண்டறியப்பட்ட இரண்டு தடுப்பு மருந்துகள் முதலாம் மற்றும் இரண்டாம் மருத்துவ மனித சோதனைகளில் உள்ளதாகவும், இந்தியாவின் முதல் COVID-19 தடுப்பூசி கோவாக்சின் பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. மற்றொரு தடுப்பூசியை சைடஸ் காடிலா உருவாக்கியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியோரால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் மனித மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஒப்புதல் பெற்றுள்ளது எனவும் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் ஸ்வீடிஷ் நிறுவனம் இந்தியா மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாட்டிற்கான தடுப்பூசி தயாரிக்க SII உடன் கூட்டு சேர்ந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்திய மக்களுக்கு எப்போது கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 'நம் விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்து குறித்து எங்களுக்கு பச்சை சமிக்ஞை கொடுக்கும் போது, அது வெகுஜன அளவில் தயாரிக்கப்படும், அதற்கான தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்கூட்டியே செய்யப்பட்டுள்ளன' என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், 'நான் மக்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் நம் விஞ்ஞானிகளின் திறமை 'ரிஷி முனி'களைப் போன்றது, அவர்கள் ஆய்வகங்களில் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள்," என்று மோடி சுதந்திர தினத்தில் உரையாற்றியபோது கூறினார்.
மேலும், கோவிட் -19 தடுப்பூசி மிகக் குறுகிய காலத்தில் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்கான ஒரு வரைபடத்தை இந்தியா தயார் செய்துள்ளது" எனவும் கூறியுள்ளார்