“வீட்டுக்குள்ள போனதும், சோபாவில் இருந்ததை பாத்து ஷாக் ஆயிட்டேன்!”.. இளம் பெண்களைக் கொன்று சடலத்தை ‘ப்ரீசருக்குள்’ திணித்த வழக்கு.. கைதான நபர் சொன்ன பகீர் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்லண்டனில் இறந்துபோன இரண்டு இளம்பெண்களின் உடல்களை ப்ரீசரில் அடைத்து வைத்திருந்ததற்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Zahid Younis(35) என்ற நபர் காணவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கு ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்த ப்ரீசர் ஒன்றை கண்டு திறந்து பார்த்துள்ளனர்.
அந்த ப்ரீசருக்குள் இரண்டு இளம் பெண்களின் சடலங்கள் திணித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள், பின்னர் வேறொரு வீட்டில் இருந்த Younis-ஐ கைது செய்து விசாரித்தனர். இதனிடையே
இறந்த பெண்கள், ஹங்கேரி நாட்டை சேர்ந்த Henriett Szucs(34) மற்றும் Mihrican Mustafa(38) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையில் இந்த பெண்கள் இருவரும் பயங்கரமாக அடித்துக் கொல்லப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர் விசாரணையில், Younis உடன் தங்கியிருந்ததாக கூறப்படும் அந்த பெண்கள் இருவரும் திடீரென மாயமாகியதும், முன்னதாக Szucs உடன் சில முறை உடல் ரீதியாக உறவு கொண்டதாக தெரிவித்த Younis, பிறகு தான் ஒரு பாலியல் தொழிலாளி என்று கூறியதால் அப்பெண்ணுடனான உறவை முறித்துக் கொண்டதாகவும், ஒருநாள் தன் வீட்டு சோபாவில் அவர் இறந்து கிடந்ததை திடீரென கண்டு, தான் திடுக்கிட்டதாகவும் தெரிவித்தார்.
இதேபோல், Mihrican Mustafa வின் உடல் தன் நண்பர் ஒருவர் வீட்டில் கிடந்ததாகவும், அந்த நண்பர்தான், தன்னை மிரட்டி இரு உடல்களையும் தன் வீட்டில் இருந்த ப்ரீசருக்குள் கொண்டு வந்து வைத்தாகவும் கூறியுள்ளார் Younis.
மொத்தத்தில் இரண்டு பெண்களையுமே தான் கொல்லவில்லை என்று Younis கூறியுள்ளதால், வழக்கு இழுபறிக்குள் சிக்கியுள்ளது.