'நாடு இருக்கிற நிலைமையில'...'பெல்லி டான்ஸ்' கேக்குது'...'கவர்ச்சி ஆட்டம் போட்ட அழகிகள்'...கொதித்த நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Sep 09, 2019 11:48 AM

பாகிஸ்தான் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடைபெற்ற கவர்ச்சியான பெல்லி டான்ஸ் நிகழ்வுக்கு சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

Belly Dancers performing at the investment conference in Pakistan

பாகிஸ்தானில் தற்போது வேலை இல்லா திண்டாட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பொருளாதாரம் தற்போது அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இதையடுத்து நாட்டின் பொருளாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் அதிகரிக்க பாகிஸ்தான் அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பக்கமாக பாகிஸ்தானின் எஸ்.சி.சி.ஐ.பி அமைப்பு முதலீட்டாளர்கள் மாநாட்டை கடந்த 4 தேதி முதல் 8 வரை அஜர்பைஜானில் நடத்தியது. அதுதான் தற்போது கடும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அஜர்பைஜானில் உள்ள பாகுவில், சர்ஹாத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரி நடத்திய மாநாட்டில் பல நிறுவனங்களும் அதன் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டிற்கான மேடையில் அவ்வப்போது பெண் பெல்லி கலைஞர்களின் கவர்ச்சி நடனமும் நடைபெற்றது. இது தற்போது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

பொருளாதாரம் தலைகீழாக சென்று கொண்டிருக்கும் போது இதுபோன்ற நிகழ்வுகள் தேவையா என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள், மேலும் பெல்லி டான்ஸ் வீடியோவை  பகிர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், ''பாகிஸ்தானுக்கான முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி நடனக்கலைஞர்களுடன் முதலீடுகளை ஈர்க்க முயற்சி '' என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #PAKISTAN #BELLY DANCERS #INVESTMENT CONFERENCE #SARHAD CHAMBER OF COMMERCE AND INDUSTRY #AZERBAIJAN