என்ன பொசுக்குன்னு 'இப்படி' சொல்லிட்டாரு...! 'கலக்கத்தில் பக்தர்கள்...' - கைலாசா அதிபர் வெளியிட்ட 'அதிரடி' அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > உலகம்சமீபகாலமாக நித்யானந்தா குறித்து பரபரப்பு செய்திகள் வெளியாகத நிலையில், தற்போது இந்தியர்களை புறம்தள்ளுவதை போல அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த நித்யானந்தா, கைலாசா என்ற பெயரில் தனித் தீவு ஒன்றினை உருவாக்கி, அதற்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அனைத்தையும் அறிவித்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தார்.
அந்த செய்தி பெரும் ட்ரெண்டிங் ஆகி கொரோனா பரவலால் சிலர் கைலாசத்திற்கு வருவதாகவும், அங்கு தொழில் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இணையத்தில் இருக்கும் இளைஞர்கள் என்ன கலாய்த்தாலும் அதை சிரியஸ் ஆக எடுத்துக்கொண்டு அதற்கு ஒரு சில பதிலும் நித்யானந்தா அவரின் யூடியூப்பில் வெளியிடுவார். சமீபத்தில் நித்யானந்தாவின் திருமால் வேடத்தில் இருக்கும் போட்டோவும் வைரலாகியது.
இவரின் பெருமாள் வேடத்தின் அதிர்ச்சியே அடங்குவதற்கு முன், இந்தியர்களுக்கு ஒரு பெரும் சோக அறிக்கையை வெளியிட்டுள்ளார் நித்யானந்தா.
19.04.2021அன்று நித்யானந்தா வெளியிட்ட அறிக்கையில், 'கொரோனா வைரஸ் பரவல் பல நாடுகளில் தீவிரமடைந்துள்ளதால் கைலாசா நாட்டிற்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் மிகுதியாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
கைலாசாவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்' என கூறியுள்ளார்.
இதனால் கனவிலேயே கைலாசத்தில் வாழும் நித்யானந்தாவின் பக்தர்களும், இணைய இளைஞர்களும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.