குழந்தைகளை தாக்கும் 'மர்ம' நோய்... ஐந்து வயது 'சிறுவன்' பலி... 73 குழந்தைகள் பாதிப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கவில் கொரோனா வைரஸ் ஒருபக்கம் கடுமையாக தாக்கி வரும் நிலையில் இன்னொரு பக்கம் அங்குள்ள 2 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மர்ம நோய் ஒன்று தாக்கி வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

முன்னதாக இந்த நோய் தொற்று கவாசாகி என்ற நோய் தொற்றுடன் ஒத்து இருப்பதாக நியூயார்க் நகர மேயர் தெரிவித்திருந்தார். மேலும், இந்த தொற்று கொரோனா வைரஸ் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மர்ம வைரஸ் காரணமாக நியூயார்க்கை சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் பகுதியில் இதுவரை சுமார் 70 குழந்தைகள் இந்த மர்ம நோய் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து நாட்களுக்கு காய்ச்சலுடன் இருக்கும் தங்களது குழந்தைகளை உடனடியாக பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என நியூயார்க் நகர சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
