'அண்ணன், தம்பி ரெண்டு பேரும் சேர்ந்து...' 'ஓட்டைய போட்டு ஆட்டைய போட்ருக்காங்க...' 'சரக்க எங்க பதுக்கி வச்சிருந்தாங்க தெரியுமா...? பரபரப்பு சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பட்டுக்கோட்டையில் இரு சகோதரர்கள் சேர்ந்து, அரசு டாஸ்மாக் கடையில் ஓட்டை போட்டு 2 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை திருடியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க ஊரடங்கு உத்தரவு கைபிடிக்கப்பட்டு வருகிறது. சமூக பரவலை தடுப்பதற்கு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அத்யாவசிய பொருட்கள் விற்க்கப்படும் கடைகளுக்கு மட்டும் சில நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மேலும் மருந்தகங்களை தவிர மற்ற அனைத்து கடைகளும் மதியம் 1 மணிக்கு மேல் திறக்க தடை உள்ளது.
டாஸ்மாக் கடைகளை முழுவதும் இழுத்து மூடியுள்ளது தமிழக அரசு. இந்நிலையில் தமிழ்நாட்டின் குடிமகன்கள் தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாமல் போராடிவருகின்றனர். ஒரு சில இடங்களில் ஊரடங்கிற்கு முன்பே வாங்கி வைத்த மதுபாட்டில்களை அதிக விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் டாஸ்மாக் கடையின் சுவரில் ஓட்டைப்போட்டு சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடியுள்ளனர். இதை அறிந்த பட்டுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரைவேல் மற்றும் அவருடைய சகோதரர் சக்திவேல் ஆகியோர் சேர்ந்து சில நாட்களாக திட்டம் திட்டி இந்த கொள்ளையை நடத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
கொள்ளை அடித்த மதுபாட்டில்கள் எங்கே என்று விசாரித்தபோது, அதனை வயல்வெளியில் பதுக்கி வைத்திருந்ததையும் கூறியுள்ளனர். அதன் பிறகு திருடப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
