12 வருசமா தேடியும் கிடைக்காத குற்றவாளி?.. கடைசியா அவரு இருக்குற இடம் பத்தி தெரிஞ்சதும் திகைச்சு போன போலீஸ்.. இங்க எப்டி?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Dec 28, 2022 07:59 PM

12 ஆண்டுகளாக குற்றவாளி ஒருவர் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் இருக்கும் இடம் குறித்து பரபரப்பு தகவல் ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது.

Most wanted man by police found after 12 years reportedly

Also Read | "அவர் ஆடுற விதத்துக்கு.. சீக்கிரமே ஒரு நாள் கிரிக்கெட்ல 300 ரன் அடிப்பாரு".. இந்திய வீரரை பாராட்டிய சுனில் கவாஸ்கர்.. யாரை சொல்றாரு?

கடந்த 2010 ஆம் ஆண்டு, அமெரிக்க பல்கலைக்கழகத்தை சேர்ந்த Sue Marcum என்ற 52 வயது பேராசிரியை பெதஸ்தா பகுதியில் தனது புதிய வீட்டின் படிக்கட்டு Basement பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதிர்ச்சி மற்றும்  மூச்சுத் திணறல் உள்ளிழுத்த காரணங்கள் தான் திருமதி Sue Marcum மரணத்திற்கு காரணம் என்றும் புலனாய்வாளர்கள் முதலில் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதன் பின்னர் தான் சூ மார்கமின் நகத்தில் இருந்த DNA வேறொரு நபருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. அப்படி ஒரு சூழலில் இதை செய்தது யார் என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது தான், Jorge Rueda Landeros என்ற நபர் இதில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஜோர்ஜ் ரூடா என்ற நபர், சூ மார்கமிற்கு ஸ்பானிஷ் ஆசிரியராக இருந்ததுடன் அவருக்கு யோகா ஆசிரியராகவும் இருந்து வந்துள்ளார்.

Most wanted man by police found after 12 years reportedly

2010 ஆம் ஆண்டு, சூ மார்க்கம் உயிரிழந்த பிறகு, ஜோர்ஜ் ரூடாவை சந்தேகப்படும் நபராக கருதி, அவரை போலீசார் பல இடங்களில் தேடி வந்துள்ளனர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழலில், சுமார் 12 ஆண்டுகள் கழித்து ஜோர்ஜ் இருக்கும் இடம் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்து அவரை தற்போது கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளின் குடியுரிமை கொண்ட ஜோர்ஜ், மெக்சிகோவுக்கு சென்று அங்கே யோகா பள்ளி ஒன்றை நிறுவி ஏராளமானோருக்கு யோகா கற்றுக் கொண்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Most wanted man by police found after 12 years reportedly

அதே போல, தனது பெயரை லியோன் பெர்ரா என் மாற்றி வைத்துக் கொண்டு தனது மாணவர்களுக்கு யோகா கற்றுக் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. அவரது மாணவர்கள் சிலர், ஆசிரியர் யோகா வகுப்பு எடுக்க வராமல் போனதால் இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அப்போது அப்படி ஒரு பெயரில் ஆளே இல்லை என போலீசார் தெரிவித்ததும் மாணவர்கள் அனைவரும் அதிர்ந்து போனதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தான், அவர்கள் அனைவருக்கும் 12 ஆண்டுகளாக கொலை வழக்கில் குற்றவாளி தான் தங்களின் யோகா ஆசிரியர் என்பதும், அவரது பெயரை மாற்றி வைத்துக் கொண்டு யோகா வகுப்புகள் எடுத்து வந்த திடுக்கிடும் தகவல்களும் தெரிய வந்துள்ளது.

2010 ஆம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக, ஜோர்ஜை போலீசார் விசாரித்து வரும் சூழலில், அவர் யோகா ஆசிரியராக இத்தனை நாட்கள் செயல்பட்டு வந்த விஷயம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | விமான பயணம் செய்து இளம்பெண்ணை தேடி வந்த வாலிபர்.. நேரில் பார்த்ததும் செய்த காரியம்!! பதைபதைக்க வைத்த சம்பவம்

Tags : #MOST WANTED MAN #POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Most wanted man by police found after 12 years reportedly | World News.