கணவரின் நண்பருடன் திருமணத்தை மீறிய உறவு.. அந்த காதலனாலேயே பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூர் அருகே திருமணத்தை மீறிய உறவால் நண்பரின் மனைவியை கொலை செய்ய முயன்றதாக ஒருவரை காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி கிளித்தான் பட்டறையைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவர், அருகில் உள்ள காந்தி நகர் பகுதியில் இயங்கி வரும் காப்பீட்டு அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில், இவருக்கும் இவருடைய கணவரின் நண்பரான சந்தோஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் இளம் பெண்ணின் கணவருக்கு இந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த கட்டிடத் தொழிலாளியான இளம்பெண்ணின் கணவர் இருவரையும் எச்சரித்திருக்கிறார். மேலும், இனிமேல் வீட்டுக்கு வரக்கூடாது என தனது நண்பரை அவர் எச்சரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து, கணவரின் நண்பருடன் பேசுவதை இளம்பெண் நிறுத்தியிருக்கிறார். இருப்பினும் தொடர்ந்து சந்தோஷ் அந்த இளம்பெண்ணிடம் பேச முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, சில தினங்களுக்கு முன்னர் இளம்பெண் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். அப்போது அவரை வழிமறித்த சந்தோஷ், தன்னுடன் வந்துவிடும்படி இளம்பெண்ணை வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால், இதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த சந்தோஷ், இளம்பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.
இந்த தாக்குதலால் பலத்த காயமடைந்த இளம்பெண் சுருண்டு விழ, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது பற்றி விருதம்பட்டு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் சந்தோஷை கைது செய்திருக்கின்றனர். இதுகுறித்த மேற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
