"அவர் ஆடுற விதத்துக்கு.. சீக்கிரமே ஒரு நாள் கிரிக்கெட்ல 300 ரன் அடிப்பாரு".. இந்திய வீரரை பாராட்டிய சுனில் கவாஸ்கர்.. யாரை சொல்றாரு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவங்காளதேச அணிக்கு எதிராக ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர்களில் கலந்து கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான தொடர்களில் ஆட உள்ளது.
Also Read | 18 மணி நேரமா.. காருக்குள் இருந்த இளம்பெண்?.. மகள் அனுப்பிய திகிலூட்டும் வீடியோவை பார்த்து கதிகலங்கிய தாய்!!
முன்னதாக, வங்காளதேச அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி இழந்திருந்த நிலையில், இதன் பின்னர் நடந்த டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
இதற்கு அடுத்தபடியாக, இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 3 டி 20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பமாகிறது.
2023 ஆம் ஆண்டு, இரு அணிகளுக்கும் முதல் தொடராகவும் இது பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வைத்து இந்த இருதரப்பு தொடர்கள் நடைபெற உள்ள நிலையில், இதற்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் டி 20 தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா தலைமை தாங்க உள்ளார். இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களுக்கு பிறகு இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கான எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் விதத்தில் தான் அவர்கள் ஜூன் மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலும் உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் இளம் வீரர் குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ள கருத்து தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஐபிஎல் உள்ளிட்ட பல உள்ளூர் தொடர்களில் பட்டையை கிளப்பி இந்திய அணியில் இடம் பிடித்தவர் இளம் வீரர் இஷான் கிஷன்.
சமீபத்தில் வங்காளதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் களமிறங்கி இருந்த இஷான் கிஷன், 210 ரன்கள் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்திருந்தார்.
இந்திய அணி சார்பில் இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா (2 முறை) மற்றும் சேவாக் உள்ளிட்ட வீரர்கள் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளனர். அது மட்டுமில்லாமல், ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையையும் இஷான் கிஷன் முறியடித்துள்ளார். தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தையே இரட்டை சதமாக மாற்றி பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கிய இஷான் கிஷனை பலரும் பாராட்டி இருந்தனர்.
அப்படி ஒரு சூழ்நிலையில் தற்போது இஷான் கிஷன் குறித்து சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை பேசி உள்ளார். "நிறைய இளம் வீரர்கள் இந்தியாவுக்காக விளையாட வரும்போது இந்திய அணியின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்ற நம்பிக்கை வருகிறது. இந்த வருடம் உயர்ந்த செயல்பாடுகளை நிகழ்த்தியவராக இஷான் கிஷன் திகழ்ந்தார். குறிப்பாக ஐம்பது ஓவர் போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது மிகச் சிறந்த சாதனையாகும்.
இருப்பினும் அவர் எளிமையாக, அதுவும் 35 - 36 வது ஓவரில் இரட்டை சதம் அடித்து அவுட் ஆகிவிட்டார். ஒருவேளை போட்டியில் தொடர்ந்து அவர் விளையாடியிருந்தால் நிச்சயம் ஒருநாள் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் வீரராக சாதனை படைத்திருப்பார். ஆனாலும் தற்போது அவர் பேட்டிங் செய்யும் விதத்திற்கு வரும் காலங்களில் அது நிச்சயமாக நடக்கும். அது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும் மிகச்சிறந்த வீரரான இஷான் கிஷன், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடிக்கும் திறமை பெற்றுள்ளார். ரிஷப் பந்த் போல நமது அணியில் சூழ்நிலைக்கு அஞ்சாமல் காரமாக அடிக்கும் திறமை கொண்டவர் இஷான் கிஷன்" என சுனில் கவாஸ்கர் மனதார பாராட்டி உள்ளார்.