சூர்யாதேவி தொடர்பில் சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கைதா?.. பரபரப்பு தகவல்கள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல சின்னத்திரை நடிகரான நாஞ்சில் விஜயன் சென்னையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் டிவி மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் நாஞ்சில் விஜயன். சிரிச்சா போச்சு, அது, இது, எது? உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வித்தியாசமான தோற்றங்களில் களமிறங்கி பலரையும் சிரிக்க வைத்தவர் விஜயன். பெண் வேடங்களில் இவர் தோன்றி நடித்த பல நிகழ்ச்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவை என்றே சொல்லவேண்டும். இந்நிலையில், நாஞ்சில் விஜயன் பிரபல சின்னத்திரை தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று நாஞ்சில் விஜயனை சென்னை வளசரவாக்கம் காவல் துறையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு, சூர்யா தேவி என்பவர் குறித்து நாஞ்சில் விஜயன் பேசியதாக சொல்லப்படுகிறது. அதில், தன்னைப் பற்றி இழிவாக நாஞ்சில் விஜயன் பேசியதாக சூர்யா தேவி காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
முன்னதாக, சூர்யா தேவி தனது நண்பருடன் சென்று நாஞ்சில் விஜயனிடம் பேசியதாகவும் அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சூர்யா தேவி அளித்த புகார் தொடர்பாக நாஞ்சில் விஜயன் மீது வெவ்வேறு பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில், இந்த புகார் குறித்த விசாரணைக்கு நாஞ்சில் விஜயன் ஆஜராகாததால் அவரை வளசரவாக்கம் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற செய்திகள்
