"ஷ்ரத்தா கொலைக்கு பிறகு BREAK UP செய்தோம்".. பிரபல சீரியல் நடிகை உயிரிழப்பு.. முன்னாள் காதலன் சொன்ன திடுக்கிடும் தகவல்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Dec 26, 2022 09:06 PM

இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் துனிஷா சர்மா. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த துனிஷா, பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.

Tunisha Sharma lover says shraddha case forced break up reportedly

Also Read | "கனவுத் திட்டம்".. ஊர் மக்களோடு சேர்ந்து கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் கிரிக்கெட் வீரர் நடராஜன்.. அவரே வெளியிட்ட வைரல் வீடியோ!

இவர் தற்போது அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வந்துள்ளார். இந்த சூழலில் மும்பை அருகே உள்ள வசாய் நைகாவ் ராம்தேவ் ஸ்டூடியோவில் டிவி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டதாக தெரிகிறது.

அந்த சமயத்தில் படப்பிடிப்பின் போது மதிய உணவுக்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மேக்கப் அறைக்கு துனிஷா சென்றதாக தகவல்கள் கூறுகின்றது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அறையின் கதவு மூடப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்ததாக தகவல்கள் கூறுகின்றது. அங்கே நடிகை துனிஷா சர்மா விபரீத முடிவு எடுத்து இருந்ததைக் கண்டு அனைவரும் பதறிப் போயினர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், துனிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Tunisha Sharma lover says shraddha case forced break up reportedly

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நடிகை துனிஷாவின் விபரீத முடிவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். ஒரு சில தினங்கள் முன்பு கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த துனிசா, "இந்த தருணத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். அதுவே வாழ்வில் போதும்" என பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த பதிவுக்கு அடுத்தபடியாக தான் விபரீத முடிவு எடுப்பதற்கு முன்பு, " தங்கள் பேர் ஆர்வத்தால் உந்தப்படுபவர்கள் எந்த இடத்திலும் நின்று போக மாட்டார்கள்" என கடைசியாக நடிகை துனிஷா சர்மா இன்ஸ்டாகிராம் பதிவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tunisha Sharma lover says shraddha case forced break up reportedly

இதனிடையே, அவரது காதலரும் நடிகருமான ஷீசன் முகமது என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். துனிஷா விபரீத முடிவை எடுக்க ஷீசன் முகமது காரணம் என தகவல் தெரிவிக்கும் நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில பரபரப்பு தகவல்களும் வெளியாகி உள்ளது.

அதன்படி, இதற்கு முன்னரே துனிஷா சர்மா விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் அந்த சமயத்தில் ஷீசன் அவரை காப்பாற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, சமீபத்தில் ஷ்ரத்தா என்ற பெண்ணை அஃப்தாப் கொலை செய்திருந்தது தொடர்பான செய்தி நாட்டையே அதிர வைத்திருந்தது. அந்த சம்பவத்தின் காரணமாக தான் அவர்கள் பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

துனிஷா மரணம் குறித்து அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது, நாட்டையே அதிகம் உலுக்கி உள்ளது.

Also Read | "என் வாழ்க்கைய அழிச்சுட்டே".. பெண் மீது கவிஞர் தாமரையின் பகிரங்க குற்றச்சாட்டு!!.. பரபரப்பு பின்னணி"

Tags : #TUNISHA SHARMA #LOVER #SHRADDHA CASE #BREAK UP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tunisha Sharma lover says shraddha case forced break up reportedly | India News.